இந்தியாவிற்கு 75 லட்சம் மாடர்னா தடுப்பூசிகள் - உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவிற்கு விரைவில் 'மாடர்னா' கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.;

Update: 2021-07-20 03:49 GMT
இந்தியாவிற்கு விரைவில் 'மாடர்னா' கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கோவேக்ஸ் திட்டத்தின் மூலம் 75 லட்சம் 'மாடர்னா' தடுப்பூசிகள் இந்தியாவிற்கு வழங்கப்பட உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குனர், பூனம் கேத்ரபால் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை தொடர்ந்து அமெரிக்காவின் 'மாடர்னா' தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்