லட்சத்தீவில் முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு - பிரஃபுல் பட்டேல் உத்தரவிற்கு நீதிமன்றம் தடை

இலட்சத்தீவில் நிலம் விற்பதற்கான முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்திய லட்சத்தீவு நிர்வாகத்தின் உத்தரவிற்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.;

Update: 2021-07-01 13:55 GMT
இலட்சத்தீவில் நிலம் விற்பதற்கான முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்திய லட்சத்தீவு நிர்வாகத்தின் உத்தரவிற்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இலட்சத்தீவு நிர்வாகி பிரஃபுல் பட்டேல் நிலங்களை விற்கவும், மற்றொரு பெயருக்கு மாற்றுவதற்கும் செலுத்தப்படும் முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்தி உத்தரவு பிறப்பித்திருந்தார். 
இதனை எதிர்த்து குறித்து முஹம்மது சாலிஹ் என்ற வழக்கறிஞர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜா விஜயராகவன்,  முத்திரைத்தாள் கட்டண உயர்விற்கு இடைக்கால தடை விதித்துள்ளதோடு ஆண்களுக்கும் பெண்களுக்கும் முத்திரைத்தாள் கட்டணத்தில் வேறுபாடு ஏற்படுத்தியிருப்பது பாரபட்சமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்