இந்தியாவில் கொரோனா 3வது அலை ? - மத்திய முதன்மை அறிவியல் ஆலோசகர் பேட்டி

வலிமையான மற்றும் கடினமான நடவடிக்கைகளை மேற்கொண்டால் கொரோனாவின் மூன்றாவது அலை ஏற்படாமல் தடுக்க முடியும் என மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-05-07 15:56 GMT
வலிமையான மற்றும் கடினமான நடவடிக்கைகளை மேற்கொண்டால் கொரோனாவின் மூன்றாவது அலை ஏற்படாமல் தடுக்க முடியும் என மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் தெரிவித்துள்ளார். 

நாட்டில் உள்ள கொரோனா நிலவரம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார துறையின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டது. இதில் பேசிய மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பதன் மூலமே கொரோனாவின் மூன்றாம் அலையை தவிர்க்க முடியும் என கூறினார். 
முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிய விஜயராகவன், கொரோனா மூன்றாவது அலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்றும் அதனை சந்திக்க தயாராக வேண்டும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்