மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்-மத்திய அரசு

மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதையும் தீ விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

Update: 2021-05-05 13:14 GMT
மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதையும் தீ விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநில தலைமை செயலாளரர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கடந்த சில நாட்களாக நாட்டின் ஒரு சில இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது

மருத்துவமனைகளில் மின்சார ஒயர்கள் சரியாக பராமரிக்கப்படாததால் தீவிபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா மருத்துவமனைகளில் தீ விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது

மாநில அரசுகள் மின்சாரம், தீயணைப்பு மற்றும் சுகாதாரத் துறையோடு கலந்தாலோசித்து மருத்துவமனைகளில் தீ தடுப்பு வழிமுறைகள் இருப்பதை உறுதி செய்ய தேவையான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் எனவும் மத்திய அரசு  அறிவுறுத்தியுள்ளது

ஆக்சிஜன் படுக்கைகள்,ஐ.சி.யூ படுக்கைகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் போன்றவை இயங்க மின்சாரம் அவசியமானது என்பதால் கொரோனா மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் தங்குதடையற்ற மின்விநியோகம் இருப்பதை உறுதி செய்யும் படியும் மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்