தொழிற்சாலைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகம் உடனடியாக நிறுத்த மத்திய அரசு உத்தரவு

தொழிற்சாலைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்படுவதை உடனடியாக நிறுத்த மாநில தலைமை செயலாளர்களுக்கு, உள்துறை செயலாளர் அஜய்பல்லா அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2021-04-19 03:17 GMT
தொழிற்சாலைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்படுவதை உடனடியாக நிறுத்த மாநில தலைமை செயலாளர்களுக்கு, உள்துறை செயலாளர் அஜய்பல்லா அறிவுறுத்தி உள்ளார்.அதேநேரத்தில் விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகம் தொடர அனுமதிக்கவும் அறிவுறுத்தி உள்ளார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடி ஏற்பட்டதை தொடர்ந்து உற்பத்தியையும் அதிகரித்துள்ள மத்திய அரசு, இந்த நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சில கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ திரவ ஆக்ஸிஜன் அவசியமானதாக உள்ளது. தற்போது மருத்துவ திரவ ஆக்ஸிஜன் தேவை,  அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது
Tags:    

மேலும் செய்திகள்