பேஸ்புக் பயனாளர்களின் சுய விபரங்கள் கசிவு - தொடரும் குற்றச்சாட்டு

உலகளவில் 50 கோடி பேஸ்புக் பயனாளர்களின் சுய தகவல்களை திருடி ஹேக்கர்கள் இணையதளங்களில் வெளியிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2021-04-05 11:18 GMT
நவீன உலகில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக விளங்கும் சமூக வலைதளங்களில் பிரத்யேக இடம்பிடித்திருக்கும் பேஸ்புக் நிறுவனம் அடிக்கடி பயனாளர்களின் சுய விபரங்கள் கசிவு குற்றச்சாட்டை எதிர்க்கொண்டு வருகிறது.தற்போது உலகளவில் 50 கோடி பயனாளர்களின் சுய தகவல்களை திருடி ஹேக்கர்கள் இணையதளங்களில் வெளியிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.இதில் 60 லட்சம் இந்திய பயனாளர்களின் சுய விபரங்களும் அடங்கும் என தெரியவந்துள்ளது.
பேஸ்புக் வலைதளத்தில் கொடுக்கப்பட்ட செல்போன் எண், பெயர், இருக்கும் இடம், இ-மெயில், பேஸ்புக் கணக்கை எப்போது தொடங்கினோம் என்பது உள்ளிட்ட அனைத்து சுய தகவல்களும் கசிந்துள்ளது என ஹூஸ்டன் ராக் சைபர் கிரைம் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.இதில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்கின் சுய விபரங்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய பேஸ்புக் பயனாளர் ஐடி, தொலைபேசி எண், திருமண விபரம் உள்ளிட்ட தகவலும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. 
இருப்பினும் தற்போதைய தரவுகள் கசிவு விபரம் குறித்து பதிலளித்துள்ள பேஸ்புக் நிறுவனம், இது பழைய தகவல்கள் என்றும் ஏற்கனவே இப்பிரச்சினையை அடையாளம் கண்டு 2019 ஆகஸ்டில் சரி செய்துவிட்டோம் என்றும் கூறியிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்