சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு; "மலையேறும் போது மட்டும் முகக்கவசம் அணிய வேண்டாம்" - பினராயி விஜயன் கோரிக்கை

சபரிமலையில் மலையேறும் போது மூச்சுவிட சிரமம் ஏற்படும் என்பதால், பக்தர்கள் முகக்கவசம் அணிய வேண்டாம் என மாநில முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-10-16 08:50 GMT
புகழ்பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் கொரோனா ஊரடங்குக்கு பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்காக இன்று நடை திறக்கப்பட உள்ளது. விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராய் விஜயன், மலையேறும்போது முகக்கவசம் அணிந்து இருந்தால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் என்பதால், பக்தர்கள் அப்போது மட்டும் அணிய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். ஆனால், மற்ற நேரங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என வலியுறுத்திய அவர், சபரிமலை செல்லும் பக்தர்கள் கும்பலாக மலை ஏற வேண்டாம் என்றும் கிருமிநாசினியை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்த பக்தர்கள், அதற்கான சான்றுகளுடன் வந்தால் உதவிகரமாக இருக்கும் எனவும் கேட்டுக்கொண்டார். 
Tags:    

மேலும் செய்திகள்