சவுதி அரேபியா மன்னருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபிய மன்னர் சல்மானுடன், தொலைபேசி வயிலாக உரையாடினார்.;

Update: 2020-09-10 04:22 GMT
பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபிய மன்னர் சல்மானுடன், தொலைபேசி வயிலாக உரையாடினார். அப்போது, இரு தலைவர்களும்  கொரோனா தொற்றால் உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து, கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அப்போது, சவூதியில் உள்ள இந்தியர்களுக்கு, ஆதரவு அளித்த மன்னருக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இதைதொடர்ந்து இருதரப்பு உறவுகள் குறித்தும் இருவரும் பேசிய நிலையில், ஜி 20 மாநாடு குறித்தும் விவாதித்ததாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சை கட்டணம் - தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள்

தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கான சிகிச்சை கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட அளவே வசூலிப்பதை உறுதிப்படுத்த, தெலங்கானா அரசு சிறப்புக் குழுக்களை அமைக்கும் என்று, அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு பல மடங்கு சிகிச்சை கட்டணம்
வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், சந்திரசேகர ராவின் அறிவிப்பை பலரும் வரவேற்றுள்ளனர்.

புர்த்வான் குண்டு வெடிப்பு வழக்கு - 4 தீவிரவாதிகளுக்கு 7 ஆண்டு சிறை 

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற புர்த்வான் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் ஆவர். கொல்கத்தாவில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றம் 4 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்து தண்டனை வழங்கி உத்தரவிட்டது

Tags:    

மேலும் செய்திகள்