'டிக் - டாக்' உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை - அதிர்ச்சியில் ஆழ்ந்த டிக் டாக் பயனாளர்கள்...

டிக் டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

Update: 2020-06-30 05:19 GMT
டிக் டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இவற்றில் பெரும்பான்மையான ஆதரவை பெற்றிருக்கும் டிக்டாக், செயலி பயன்படுத்தும் கோடிக்காணக்கான இளம் வயதினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. செல்போன் பயன்படுத்துபவர்கள், குறிப்பாக ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருப்பவர்கள் பொழுதுபோக்கு மற்றும் பல்வேறு தேவைகளுக்காக ஏராளமான செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர். சீனாவில் உருவான இந்த டிக் டாக் செயலி, சீனாவை தவிர அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் 2018 ஆம் ஆண்டிலிருந்து பரவலான வரவேற்பைப் பெறத் துவங்கியது. 

Tags:    

மேலும் செய்திகள்