கரையை கடக்க துவங்கிய "நிசர்கா புயல்"

அரபிக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்ற நிசர்கா புயல், மும்பை அலிபாக் அருகே 40 கிலோ மீட்டர் தொலைவில் கரை கடக்கத் தொடங்கியது.

Update: 2020-06-03 13:11 GMT
ஹரிஹரேஸ்வர் - டாமன் இடையே கரையை கடக்கிறது. பாந்திரா - வர்லி கடற்கரையோரங்களில் வாகன இயக்கத்திற்கு தடை. மகாராஷ்டிராவின் பல இடங்களில் சூறை காற்றுடன் கனமழை. அரபிக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்ற நிசர்கா புயல், மும்பை அலிபாக் அருகே 40 கிலோ மீட்டர் தொலைவில் கரை கடக்கத் தொடங்கியது. அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து புயலாக மாறியது. நிசர்கா என பெயரிடப்பட்ட இந்த புயல், மும்பையின், அலிபாக் அருகே, ஹரிஹரேஸ்வர் மற்றும் டாமன் இடையே, கரையை கடக்க துவங்கியது. இதனால், அலிபாக், மும்பை, ரத்னகிரி உள்ளிட்ட இடங்களில், சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. மும்பை, கோவா  கடற்பகுதிகளில் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டது. பிற்பகல் ஒரு மணியளவில், துவங்கி கிட்டத்தட்ட 2 மணி முதல் 3 மணி நேரத்திற்குள் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. தற்போது புயல் கரையை கடந்து கொண்டிருப்பதால் மும்பையின் பாந்திராவிலிருந்து வர்லி வரை உள்ள கடற்கரையோர பகுதிகளில் வாகனங்களை இயக்க மும்பை மாநகராட்சி தடை விதித்துள்ளது.

நிசர்கா புயலால் புனே நகரில் பெய்து வரும் கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் அடுக்குமாடி வீடுகள்

நிசர்கா புயல் காரணமாக புனே நகரில் பெய்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நகரின் பல பகுதிகளில் வெள்ளம்நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மக்கள் வீடுகளில் வசிக்க முடியாமல் முதல் தளங்களில் உள்ள வீடுகளுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்