சுதந்திரத்துக்கு பின்னர் 4 வது பொருளாதார நெருக்கடி - தரச்சான்று நிறுவனமான கிரைசில் ஆய்வில் தகவல்

சுதந்திரத்துக்குப் பின்னர் இந்தியா சந்திக்கும் 4 வது பொருளாதார நெருக்கடி என தரச்சான்று நிறுவனமான கிரைசில் தெரிவித்துள்ளது.

Update: 2020-05-27 03:42 GMT
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம்வரை நிரந்தர இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.  இந்தியாவின் தற்போதைய இழப்பை ஈடுசெய்ய 3 ஆண்டுகள் ஆகும் என்றும் கூறியுள்ளது. சுதந்திரத்துக்கு பின்னர்,  1958, 1966 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் விவசாய உற்பத்தி குறைந்ததால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாகவும், தற்போதைய  பொருளாதார நெருக்கடிக்கான காரணம் வித்தியாசமானது என்றும் கிரைசில் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்