"ஷ்ராமிக் சிறப்பு ரயில் மூலமாக 37 லட்சம் பயணிகள் பயன்" - ரயில்வே துறை தகவல்

சுமார் 37 லட்சம் பயணிகள் ஷ்ராமிக் சிறப்பு ரயில் மூலமாக பயன் அடைந்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-05-24 16:45 GMT
சுமார் 37 லட்சம் பயணிகள் ஷ்ராமிக் சிறப்பு ரயில் மூலமாக பயன் அடைந்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ஞாயிறன்று  காலை 10 மணி வரை 2 ஆயிரத்து 813 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களில், 80 சதவீதம் உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்றவர்கள் என கூறப்பட்டுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி மற்றும் ரயில்வே துறை ஷ்ராமிக் சிறப்பு ரயில்களுக்கு வழக்கமான உணவு மற்றும் தண்ணீரை வழங்கி பயணிகளுக்கு சிரமத்தை குறைத்துள்ளதாகவும், ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்