இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்வு - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.;
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 34 பேர் இந்தியர்கள் என்றும், 16 பேர் வெளிநாட்டினர் என்றும் தெரிவித்துள்ள சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் சஞ்சீவ்குமார், இந்தியாவில் கொரோனா பாதிப்பால், இதுவரை உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை என்றும் தெரிவித்தார்.