Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15.12.2025) | 6 AM Headlines | ThanthiTV
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த மத்தியில் ஆளும் பாஜக அரசு தயாரா? என, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சவால் விடுத்துள்ளார்...
பாஜகவுக்கு துணை போனதற்கு, தேர்தல் ஆணையர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும், எஸ்.ஐ.ஆர். பணிக்கு எதிராக டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்துள்ளார்...
உலகப் புகழ்பெற்ற ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்..
காவல் அதிகாரிகள் இரண்டு பேர் உட்பட 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்...
திராவிடியன் மாடல் 2.0-வுக்கான பரப்புரை திருவண்ணாமலையில் தொடங்கியதாக, திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....
எதிரிகளுக்கும், உதிரிகளுக்கும் உதறல் கொடுக்கும் வகையில் உழைத்திடுமாறு திமுக இளைஞரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்....