புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் - துணைநிலை ஆளுநர் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் நியமன விவகாரத்தில், துணை நிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உள்ளாட்சி துறை அமைச்சர் நமச்சிவாயம் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-03-05 10:59 GMT
கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் முதல் காலியாக இருந்த புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் பதவிக்கு, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணனை நியமித்து  புதுச்சேரி அரசு உத்தரவிட்டது. இதை ரத்து செய்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து புதுச்சேரி உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனது முன்னாள் ஆலோசகர் தேவநீதிதாசை, மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்கும் வகையில், தகுதி நிபந்தனைகளில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றங்கள் செய்து உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மாநில தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய துணை நிலை ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பில் எந்த தவறும் இல்லை என்றும், அவரது உத்தரவு செல்லும் எனக் கூறி, அமைச்சர் நமச்சிவாயத்தின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்