அக்கோன்கோகுவா சிகரத்தை அடைந்து 12 வயது இந்திய சிறுமி சாதனை

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் உள்ள அக்கோன்கோகுவா மலை சிகரத்தை இந்தியாவை சேர்ந்த 12 வயது சிறுமி அடைந்து உலக சாதனை படைத்திருக்கிறாள்.

Update: 2020-02-10 04:25 GMT
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் உள்ள அக்கோன்கோகுவா மலை சிகரத்தை இந்தியாவை சேர்ந்த 12 வயது சிறுமி அடைந்து உலக சாதனை படைத்திருக்கிறாள். மேற்கத்திய நாடுகளிலேயே மிக உயரமான மலையாக கருதப்படும் அக்கோன்கோகுவா, கடல் மட்டத்தில் இருந்து, 6 ஆயிரத்து 962 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்நிலையில் மும்பையில் உள்ள நேவி சில்ட்ரன் பள்ளியில் 7ம் வகுப்பு பயிலும், 12 வயது சிறுமி காம்யா, இந்த சிகரத்தை அடைந்து உலக சாதனை படைத்திருக்கிறாள். இந்த சாதனையின் மூலம் உலகிலேயே மிக குறைந்த வயதில் இந்த சிகரத்தின் உச்சியை அடைந்த சிறுமி என்ற பெருமையை காம்யா பெற்றுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்