தேசிய அளவில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

Update: 2019-12-25 09:50 GMT
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கதீட்ரல் மற்றும் பாலயம் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் இதில் பங்கேற்றனர். 
இமாச்சலபிரதேசம் சிம்லாவில் உள்ள புகழ்பெற்ற தேவாலயத்திற்கு வருகை தந்தவர்களை, கிறிஸ்துமஸ் தாத்தா வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். மனம் மகிழ்ந்த கிறிஸ்தவர்கள், அவருடன் நின்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். 

கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாநகரில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கூட்டு வழிபாடு நடைபெற்றது. வழிபாடு இடையே குழந்தை ஏசுவின் உருவ பொம்மை, குடிலில் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. 

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நடந்த கிறிஸ்துமஸ் கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொண்ட மக்கள், குழந்தை ஏசுவிடம் ஆசி பெற்றனர். 

டெல்லியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியது. விழாவையொட்டி, தேவாலயம் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. அங்கு வந்த கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, பிரார்த்தனை செய்தனர். 

கோவா மாநிலம் பனாஜியில், தேவாலயத்திற்கு சொந்தமான திடலில், சிறப்பு ஆராதனை நடந்தது. புத்தாடை அணிந்து வந்த  ஏராளமான கிறிஸ்தவர்கள், சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்.  

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகரில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக குழந்தை ஏசுவை குடியிலில் வைக்கும் நிகழ்வு நடந்தது. பிரார்த்தனையின் இறுதியில், தேவாலய பங்கு தந்தை, அப்பம் வழங்கி கிறிஸ்தவர்களை ஆசீர்வாதம் செய்தார். 


Tags:    

மேலும் செய்திகள்