புதுவைக்கு சென்ற குடியரசு தலைவருக்கு வரவேற்பு - பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்
மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக புதுச்சேரிக்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது;
மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, புதுச்சேரிக்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் வரவேற்பு அளித்தனர். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.