அயோத்தி மேல்முறையீட்டு வழக்கு : "இஸ்லாமிய அமைப்பின் மனுவில் ராஜீவ் தவன் பெயர் இல்லை" - அட்வகேட் கடிதம்

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஜாமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பு, மேல்முறையீட்டு மனுவை நேற்று தாக்கல் செய்தது.

Update: 2019-12-03 11:24 GMT
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஜாமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பு, மேல்முறையீட்டு மனுவை நேற்று தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கில் முஸ்லீம் அமைப்புகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவன் பெயர் மேல்முறையீட்டு மனுவில் இடம்பெறவில்லை. உடல்நலம் சரியில்லாத நிலையில், அவரை அணுக இயலாததால், ராஜீவ் தவன் பெயர் மனுவில் இடம் பெறவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டது தொடர்பாக ராஜீவ் தவனுக்கு, அட்வகேட் ஆன் ரிக்கார்ட் ஈஜாஸ் மக்புல் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராஜீவ் தவன், ஈஜாஸ் அகமது கருத்து தவறானது, உண்மைக்கு மாறானது என தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்