காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை : மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்

புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி, மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-11-22 12:34 GMT
புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த விபல்குமார்,  நேற்று காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  விபல்குமார் தற்கொலையில் சிபிஐ விசாரணை கோரி மருத்துவமனை முன்பு 100-க்கும் மேற்பட்ட உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, விபல்குமாருக்கு, தொடர் அழுத்தம் கொடுத்துவந்த ஆய்வாளர் கலைச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தனர். பின்னர், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல்அல்வால் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக, சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்