"சபரிமலை கோயிலுக்கு என்று தனி சட்டத்தை உருவாக்க வேண்டும்" - கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

சபரிமலை கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் நலனுக்காக தனி சட்டம் இயற்ற, கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது;

Update: 2019-11-20 11:35 GMT
இது தொடர்பாக, பந்தள அரச குடும்பத்தைச் சேர்ந்த ரேவதி நல் ராம வர்மராஜா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், கேரளத்தில் உள்ள 150 கோயில்களை இணைத்து, திருவாங்கூர்- கொச்சின் இந்து சமய நிறுவன சட்டத்தை கேரள அரசு இயற்றியுள்ளதாக கூறியுள்ளார். ஆனால், சபரிமலை கோயில் என்பது தனி அடையாளமாக உள்ளதால், அந்த கோயிலுக்கு என்று தனி சட்டத்தை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.வி.ரமணா, பி.ஆர்.கவாய் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, கொச்சின்  - திருவாங்கூர் இந்து நிறுவனங்கள் சட்டம் மட்டும் போதாது என்ற நீதிபதிகள்,  சபரிமலை கோயிலுக்கு என்று, பிரத்தியேக சட்டத்தை இயற்ற, கேரளா அரசுக்கு உத்தரவிட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்