ஹரியானாவில் புதிய அரசு அமைப்பது யார்...?
ஹரியானா மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.;
ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை துவக்கத்தில் இருந்தே ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி மொத்தம் உள்ள 90 இடங்களில், ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில், 39 இடங்களில் பாஜகவும், 32 இடங்களில் காங்கிரசும் முன்னிலையில் உள்ளன. அதே நேரத்தில், முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் கொள்ளுப்பேரனும் முன்னாள் முதல்வர் சவுதாலாவின் பேரனுமான துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி, 10 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதுபோல, இதர கட்சிகள் 8 இடங்களில் முன்னிலையில் உள்ளன. இதனால், அரியானா மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமையுமா? அல்லது காங்கிரஸ் ஆட்சி அமையுமா என்பது துஷ்யத் சவுதாலாவின் கைகளில் உள்ளது.