மரடு அடுக்குமாடி குடியிருப்பு விவகாரம் : கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

கேரள மாநிலம் கொச்சியில், மரடு என்ற பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை, இடிக்க உத்தரவிட்ட வழக்கில், உரிமையாளர்களுக்கு தலா 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-09-27 09:29 GMT
கேரள மாநிலம் கொச்சியில், மரடு என்ற பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை, இடிக்க உத்தரவிட்ட வழக்கில், உரிமையாளர்களுக்கு தலா 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 350 வீடுகள் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்காவிட்டால், வேறொரு அமைப்பைக் கொண்டு இடிக்கச் சொல்வோம் என்றும், அதற்கான செலவை கேரள அரசே ஏற்க வேண்டும் எனவும் நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது. மேலும், குடியிருப்புவாசிகளுக்கு தங்குமிடத்தையும், நஷ்ட ஈட்டையும்  உடனடியாக வழங்க வேண்டும் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்