பரபரப்பான சூழலில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் : காஷ்மீர் மாநிலம் தொடர்பாக முக்கிய ஆலோசனை என தகவல்

காஷ்மீரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஆலோசனை நடத்தினார்.

Update: 2019-08-04 21:03 GMT
காஷ்மீரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஆலோசனை நடத்தினார். இதில், உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். ஒரு மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில் காஷ்மீர் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் 144 தடை உத்தரவு, தலைவர்கள் வீட்டுக் காவலில் வைப்பு உள்ளிட்ட பதற்றமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள பரபரப்பான சூழலில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பிரதமர் மோடி வீட்டில் இன்று காலை 9.30 மணிக்கு  நடக்க உள்ள பாதுகாப்புக்கான அமைச்சரவையில் கூட்டத்தில் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், காஷ்மீர் மாநிலம் தொடர்பான முக்கிய சில முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்