கர்நாடகாவில் பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 14 பேரை கட்சியில் இருந்து வெளியேற்ற தலைமை ஒப்புதல்

கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 14 பேரை கட்சியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஒப்புதல் வழங்கியுள்ளது.;

Update: 2019-07-31 02:28 GMT
கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 14 பேரை கட்சியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைக்கு, அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஒப்புதல் வழங்கியுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு எதிராக காங்கிரஸை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அங்கு பாஜக ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில், ஆட்சி மாற்றத்துக்கு காரணமான அந்த 14 பேரையும் கட்சியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கை தொடர்பாக, அம்மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ்குண்டுராவ், காங்கிரஸ் தலைமைக்கு  கடிதம் எழுதியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி ஒப்புதல் வழங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்