பெண்ணின் வயிற்றிலிருந்து 1.5 கிலோ நகைகள் அகற்றம்...

மேற்கு வங்க மாநிலம், பிர்பம் நகரை சேர்ந்த பெண் ஒருவரின் வயிற்றிலிருந்து ஒன்றரை கிலோ நகைகள் மற்றும் 90 நாணயங்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.;

Update: 2019-07-26 04:56 GMT
மேற்கு வங்க மாநிலம், பிர்பம் நகரை சேர்ந்த பெண் ஒருவரின் வயிற்றிலிருந்து ஒன்றரை கிலோ நகைகள் மற்றும் 90 நாணயங்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். மனநிலை பாதிக்கப்பட்ட 49 வயதான அந்த பெண்ணுக்கு கடந்த 2 மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது, எக்ஸ்ரே எடுத்ததில், பெண்ணின் வயிற்றில் உலோக பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பிர்பம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து ஒன்றரை கிலோ நகைகள் மற்றும் 90 நாணயங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
Tags:    

மேலும் செய்திகள்