புதுச்சேரியில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து... ஒரு கார், 4 இருசக்கர வாகனம் மீது மோதியது

புதுச்சேரியில் தாறுமாறாக ஓடி இரண்டு கார்கள் மற்றும் நான்கு இருச்சக்கர வாகனங்கள் மீது மோதிய தனியார் பேருந்தை பொதுமக்கள் தாக்கி கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2019-07-21 03:09 GMT
புதுச்சேரியில் இருந்து கடலூர் சென்ற தனியார் பேருந்து ஒன்று அதிவேகமாக சென்றது. அப்போது எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருக்க, ஓட்டுனர் பேருந்தை திருப்பினார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 2 கார்கள், ஒரு சரக்கு வேன் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் படுகாயமடைந்த 5 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பயங்கர விபத்தை கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள், பேருந்தை சரமாரியாக தாக்கி கண்ணாடியை உடைத்தனர். பேருந்து ஓட்டுனர், அங்கிருந்து தப்பிச் சென்று ஒரு கடைக்குள் புகுந்தார். அவரை விடாமல் துரத்தி பிடித்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்து வந்த முதலியார்பேட்டை போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்த சம்பவம் காரணமாக புதுச்சேரி, கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  
Tags:    

மேலும் செய்திகள்