கேரளாவை, மத்திய அரசு வஞ்சிக்கிறது : முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

கேரள மாநிலத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.;

Update: 2019-05-07 19:36 GMT
கேரள முதல்வர் பினராயி விஜயன், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கர்நாடக எல்லையான காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரையிலான சாலை விரிவாக்க பணிகளை கேரள அரசுடன் ஆலோசிக்காமல், மத்திய அரசு தன்னிச்சையாக நிறுத்தி விட்டதாக குற்றம் சாட்டினார்.கேரளாவில் மக்களவை தேர்தலுக்கான வாக்கெடுப்பு முடிந்தவுடன்இந்தச்செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்பெட்ரோல், டீசலுக்கு வரி வசூலிக்கும் மத்திய அரசு அதனை கேரள மாநிலத்தில் நெடுஞ்சாலைகளுக்கு செலவிடவில்லை எனவும், பாஜகவுக்கு சாதகமான மாநிலங்களுக்கு அதிக நிதி செலவிடுவதாகவும் அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்