நீரவ் மோடியை இந்தியா கொண்டு வர நடவடிக்கை : வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தகவல்

தொழிலதிபர் நீரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதற்கான கோரிக்கையை இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2019-03-09 07:40 GMT
வெளியுறவு அமைச்சக செய்தி  தொடர்பாளர் ரவீஷ்குமார், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,   இந்தியப் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகச் சொல்லும் பாகிஸ்தான், அதற்கான வீடியோ ஆதாரத்தை வெளியிடாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.  ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை பாதுகாக்க பாகிஸ்தான் முயற்சி செய்வதாகவும், தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். அமெரிக்கா உடனான விமான விற்பனை ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் எப்-16 போர் விமானத்தை பயன்படுத்தி உள்ளது என்றும் குறிப்பிட்ட ரவீஷ்குமார்,  இங்கிலாந்தில் இருக்கும் விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோரை இந்தியா கொண்டு வருவதற்கான  நடவடிக்கைகளை அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ளது என்றும் கூறினார். நாடு கடத்துவது தொடர்பாக இந்தியா எழுதிய கடிதத்திற்கு பிரிட்டன் இன்னும் பதில் அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்