டெல்லியில் விவசாயிகள் மாபெரும் பேரணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணி மற்றும் சாலை மறியல் போராட்டத்தால், போக்குவரத்து முடங்கியது.;

Update: 2019-02-02 03:31 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணி மற்றும்  சாலை மறியல் போராட்டத்தால், போக்குவரத்து முடங்கியது.  ஜந்தர் மந்தரை நோக்கி புறப்பட்ட விவசாயிகளின் பேரணி, டெல்லி நொய்டாவை இணைக்கும் மேம்பாலத்தின் வழியாக சென்றதால், அந்த பாலத்தில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விவசாயிகளின் பேரணியால் ரஜினி கந்தா சவுக் பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்