10ம் வகுப்பு மாணவனை தலையில் வெட்டிய 9ம் வகுப்பு மாணவன் -சென்னை அருகே ஓடிய ரத்த ஆறு
ஸ்ரீபெரும்புதூர் அருகே யாருக்கு கெத்து- மாணவரை வெட்டிய சகமாணவன் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே பள்ளி மாணவர்களுக்கிடையே யார் கெத்து என்ற போட்டியில் பத்தாம் வகுப்பு மாணவனை கத்தியால் வெட்டிய ஒன்பதாம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டார்.
கரசங்கால் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வரும் ஒரத்தூர் பகுதியைச் சார்ந்த பத்தாம் வகுப்பு மாணவனுக்கும் படப்பை பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கும் அடிக்கடி தகாரறு ஏற்பட்டு வந்த தாக கூறப்படுகிறது. யாருக்கு கெத்து என்ற தகராறில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பள்ளி முடிந்து வெளியே வரும் பொழுது கையில் வைத்திருந்த கத்தியால் பத்தாம் வகுப்பு மாணவனை தலையில் வெட்டியுள்ளான். இதில் மாணவன் படுகாயமடைந்த நிலையில் கத்தியால் வெட்டிய மாணவன் கைது செய்யப்பட்டு சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.