பிரதமர் மோடியின் பரிசுப் பொருட்கள் ஏலம் : மின்னணு ஏலம் ஜன.31 வரை நடக்கிறது

தலைப்பாகை, ஓவியம், சிற்பம் உள்ளிட்டவை ஏலம்

Update: 2019-01-29 05:23 GMT
கங்கை நதியை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில் பிரதமர் மோடியின் பரிசுப் பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளன. பல்வேறு நாட்டுத் தலைவர்களும், கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வழங்கிய  ஓவியம், சிற்பம், சால்வை, தலைப்பாகை என சுமார் ஆயிரத்து 800 பொருட்கள், டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் கடந்த 2 நாட்களாக ஏலம் விடப்பட்டது. இவை குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் 30  ஆயிரம் ரூபாய் வரை அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இந்நிலையில், மின்னணு முறையிலான ஏலம் வரும் 31ஆம் தேதி வரை நடக்கிறது. 
Tags:    

மேலும் செய்திகள்