"உரி- சர்ஜிக்கல் ஸ்டிரைக்" திரைப்படம் : ராணுவ வீரர்களுடன் படம் பார்த்த நிர்மலா சீதாராமன்
காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.;
காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம், "சர்ஜிக்கல் ஸ்டிரைக்" எனும் துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் 20-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து "உரி-தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்" எனும் இந்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது, இதனை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள திரையரங்கில், ராணுவ வீரர்களுடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்த்தார். அவரும் தொண்டர்களும் "பாரத் மாதா கி ஜே" என முழக்கமிட்டனர்.