ராமர் கோயில் விவகாரம் : சட்ட நடவடிக்கைகள் முடிந்த பிறகே அவசர சட்டம் - பிரதமர் மோடி

நான்கு தலைமுறையாக நாட்டை ஆட்சி செய்தவர்களால் தான் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரஸ் மீது பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Update: 2019-01-01 16:24 GMT
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், சட்ட நடவடிக்கைகள் முடிந்த பிறகே, ராமர் கோயில் கட்ட அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து பரிசிலீக்க முடியும் என கூறினார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் விசாரணையை தாமதப்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் என்பது , மக்களா அல்லது மகா கூட்டணியா என்பதை முடிவு செய்யும் எனவும் பிரதமர் மோடி கூறினார். மக்களின் அன்பும், ஆசீர்வாதமும் தனக்கு இருப்பதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார். நான்கு தலைமுறையாக நாட்டை ஆட்சி செய்தவர்களால் தான் நிதி முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அவர் கூறினார். ரூபாய் நோட்டு நடவடிக்கை திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் ஓராண்டுக்கு முன்பே மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் மீதான துல்லிய தாக்குதல் குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, ஒரே தாக்குதலின் மூலம் பாகிஸ்தானின் நடவடிக்கையில் மாற்றம் கொண்டுவர முடியாது என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்