அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் அதிருப்தி - சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

கர்நாடக அமைச்சரவையில் இடம் கிடைக்காத அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.;

Update: 2018-12-24 13:48 GMT
கர்நாடக அமைச்சரவையில் இடம் கிடைக்காத அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். கர்நாடகாவில் ஆட்சி புரிந்து வரும் மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி சார்பில், கடந்த சனிக்கிழமை அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. இதில் புதிதாக காங்கிரஸ் கட்சியின் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அமைச்சரவையில் இடம் கிடைக்காத பல மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்து , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கர்நாடக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்