" வட கிழக்கு பிராந்தியம் வளர்ந்தால் நாடு வளரும் " - மிசோரம் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை
வட கிழக்கு பிராந்தியம் வளர்ச்சி பெறும்போது, இந்தியாவும் வளர்ச்சி பெறும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.;
வட கிழக்கு பிராந்தியம் வளர்ச்சி பெறும்போது, இந்தியாவும் வளர்ச்சி பெறும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். மிசோரம் மாநிலம் லுங்லெய் என்ற நகரில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய அவர், வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு பாஜக உறுதி பூண்டுள்ளது என்றார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, அதிகாரம் மட்டுமே முக்கியம் என்று பிரதமர் நரேந்திரமோடி விமர்சித்தார். மிசோரம் மாநிலத்தில், 40 தொகுதிகளுக்கு வருகிற 28 ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.