சபரிமலை வழக்கு - ஜன. 22ல் விசாரணை

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரி தொடரப்பட்ட மனுக்கள், வரும் ஜனவரி 22-ம் தேதி திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Update: 2018-11-13 14:03 GMT
சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. இதனை மறு ஆய்வு செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் 49 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணை வந்தது.அப்போது, மறு ஆய்வு மனுக்களில் முகாந்திரம் இருப்பதை ஏற்று கொண்ட நீதிபதிகள், அனைத்து மனுக்களும் வரும் ஜனவரி 22-ஆம் தேதி, திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என உத்தரவிட்டனர்.மேலும், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் முந்தைய தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.





சபரிமலை வழக்கு - ஜனவரி 22-ம் தேதி திறந்த நீதிமன்றத்தில் விசாரணை


Tags:    

மேலும் செய்திகள்