சபரிமலை விவகாரம் : கேரளா, தமிழகம், கர்நாடக மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடக மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளது.;

Update: 2018-10-19 10:23 GMT
சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடக மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளது. கடந்த 16-ம் தேதி அனுப்பட்ட அந்த கடிதத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, அனைத்து வயது பெண்களை அனுமதிப்பதை கண்டித்து, இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தபோவதாகவும், இதனால், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.  உரிய தடை உத்தரவுகளை பிறப்பிப்பதுடன், இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவாமல் தடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேரளா, தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்