எம்.ஜே. அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு : விசாரணைக்கு எடுத்துக்கொண்டது நீதிமன்றம்

பாலியல் புகாரில் சிக்கியுள்ள. மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கை பாட்டியாலா நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.;

Update: 2018-10-18 11:55 GMT
எம்.ஜே. அக்பர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 20க்கும் மேற்பட்ட பெண்கள் சமூகவலைதளத்தில் புகார் தெரிவித்திருந்தனர். இது போன்ற கருத்துக்களால் தனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக எம்.ஜே. அக்பர் பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி அமர்விஷால், வழக்கை அக்டோபர் 31ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். வழக்கு விசாரணையின் போது எம்.ஜே. அக்பர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்