"சபரிமலை பக்தர்களின் உணர்வுகள் கருத்தில் கொள்ளப்படவில்லை" - மோகன் பகவத்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியம் நீண்ட நெடிய ஒன்று என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.;
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியம் நீண்ட நெடிய ஒன்று என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். அய்யப்பன் கோவிலுக்கு செல்லாதவர்கள் தான் இந்த வழக்கை தொடர்ந்தார்கள் என்றும், பெரும்பாலான பெண்கள் இந்த நடைமுறையை கடைபிடித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் தீர்ப்பு பெரும்பாலான மக்களின் உணர்வுகளை கருத்தில் கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.