நடப்பாண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.3 %, 2019-ல் 7.4 சதவீமாக இருக்கும் - ஐ.எம்.எப்.

நடப்பாண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 புள்ளி 3 சதவீதமாகவும், 2019-ல் 7 புள்ளி 4 சதவீதமாகவும் இருக்கும் என்றும் ஐ.எம்.எப். கணித்துள்ளது.

Update: 2018-10-09 08:40 GMT
* நடப்பாண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 புள்ளி 3 சதவீதமாகவும், 2019-ல் 7 புள்ளி 4 சதவீதமாகவும் இருக்கும் என்றும் ஐ.எம்.எப். கணித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6 புள்ளி 7 சதவீதமாக இருந்த நிலையில், இந்தாண்டு வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 

* ரூபாய் நோட்டு விவகாரம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்க பிரச்சனைகளில் இருந்து பொருளாதாரம் மீண்டுள்ளதும், தனிநபர் வாங்கும் திறன் அதிகரிப்பு மற்றும் வலுவான முதலீடு ஆகியவை பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிப்புக்கு காரணம் என கூறப்படுகிறது. நாட்டின் இடைக்கால வளர்ச்சிக்கான காரணிகள் வருவாக உள்ளது என்றும் ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது. இது 7 புள்ளி 75 சதவீதமாக உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்