பூரி ஜெகநாத் ஆலயத்தில் வன்முறை : 144 தடை உத்தரவு

ஒடிஷா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன்னாத் கோவிலில் வன்முறை வெடித்ததால் அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.;

Update: 2018-10-04 04:13 GMT
ஒடிஷா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன்னாத் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரிசையில் வர வேண்டும் என கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த பக்தர்கள், கோவில் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்முறை வெடித்ததால், போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பதற்றம் நீடிக்கிறது. 
Tags:    

மேலும் செய்திகள்