நாடு முழுவதும் 3400 நுழைவு தேர்வு பயிற்சி மையங்கள் - மத்திய அரசு ஏற்பாடு

நீட், ஐ.ஐ.டி. நுழைவு தேர்வுகளுக்காக 3 ஆயிரத்து 400 பயிற்சி மையங்களை மத்திய அரசு துவங்கியுள்ளது.

Update: 2018-09-19 04:08 GMT
நாடு முழுவதிலும் உள்ள 622 மாவட்டங்களில் 3 ஆயிரத்து 400  தேர்வு பயிற்சி மையங்கள் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் முதல் கட்டமாக, ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுக்கும், மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கும், மாதிரி நுழைவு தேர்வுகள் எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

சனி, ஞாயிறுகளில் மட்டும் இவை இயங்கும் என்றும், இவற்றில் கேந்திரிய வித்யாலாயாவில்  689 மையங்களும்,  ஜவகர் நவோதயா பள்ளிகளில் 403 மையங்களும்,  அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையங்களிலும்,  குறைந்த பட்சமாக 30 கணினிகள் மாணவர்களின் பயன்பாட்டிற்காக பொருத்தப்பட்டுள்ளன. 

தமிழகத்தில், உள்ள 31 மாவட்டங்களில், மத்திய அரசால், 229 மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் மாணவர்களின் வசதிக்காக, மொத்தம் 33 ஆயிரத்து 646 கணினிகள், உள்ளன. கணினி மற்றும் இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு இவை பெரிதும்
பயனளிக்கும் என்று கருதப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்