"மருத்துவத்துக்கு உயிரியல் பாடம் தேவையில்லை" - ராஜஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

உயிரியல் பாடம் படிக்காத மாணவர்களும் மருத்துவ படிப்பில் சேரலாம் என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2018-09-01 06:08 GMT
ராஜஸ்தானை சேர்ந்த நேஹா சவுத்ரி, சூரஜ் பன்சல் ஆகிய இரண்டு மாணவர்கள், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும் மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்கவில்லை. மேல்நிலை படிப்பில், உயிரியல் பாடத்தை அவர்கள் படிக்கவில்லை என காரணம் கூறப்பட்டது. 1997ம் ஆண்டு மருத்துவ கல்வி ஒழுங்குமுறை விதிகளின் படி எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு எதிராக அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். அவர்களின் மனுக்களை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், மருத்துவ படிப்பில் சேருவதற்கு உயிரியல் பாடம் தேவையில்லை என தீர்ப்பளித்துள்ளது. நீட் தேர்வில் இரண்டு மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருப்பதால், உயிரியல் பாடம் படிக்காவிட்டாலும் எம்.பி.பி.எஸ் படிப்பில் அனுமதிக்குமாறு சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு உத்தரவிட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்