கேரளா வெள்ளத்திற்கு பின்னான புனரமைப்பு பணிகள் தீவிரம்: பாஸ்போர்ட் சேதம் - நாளை சிறப்பு முகாம்

கேரளாவில் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தை அடுத்து அங்கு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாத சூழ்நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

Update: 2018-08-31 05:28 GMT
வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அகதிகளாக நிவாரண முகாம்களில் அடைக்கலம் புகுந்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அமைச்சர்கள், அதிகாரிகள்,தன்னார்வலர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் சேறுபடிந்து வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

ஆனால் தற்போதும் ஏராளமான குடும்பங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் முகாம்களிலேயே தங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் சுத்தம் செய்யப்பட்டு வழக்கம்போல செயல்பட துவங்கியுள்ளது. 

இதனிடையே வெள்ளத்தால் மாயமான அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்களுக்கு பதிலாக புதியதாக பெற கோட்டயம், அலுவா ஆகிய பகுதிகளிலுள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அறிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்