அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் பார்க்கும் துப்புரவு தொழிலாளி

தெலுங்கானா மாநிலம் பெதகொடுரு பகுதியில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை என கூறப்படுகிறது.

Update: 2018-08-26 13:39 GMT
தெலுங்கானா மாநிலம் பெதகொடுரு பகுதியில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை என கூறப்படுகிறது. இதனால் அங்கு துப்புரவு தொழிலாளியாக பணிபுரியும் கவிதாவும், சுகாதார நிலைய காவலாளியின் மனைவி ஷோபாவும் சேர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். நோயாளிகளுக்கு ஊசி போடுவது, குளுக்கோஸ் செலுத்துவது, மருந்துகள் கொடுப்பது என்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் செய்யும் அனைத்து வேலைகளயும் அவர்களே செய்கின்றனர். இந்த மருத்துவமனையின் அவல நிலையை நோயாளியின் உறவினர் ஒருவர் செல்போனில் படம் படித்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்