"மத நூல்களை இழிவு படுத்துபவர்களுக்கு ஆயுள் தண்டனை" - பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்
பதிவு: ஆகஸ்ட் 22, 2018, 11:04 AM
பஞ்சாப்பில் மத நல்லிணக்கத்தை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மத நூல்கள் தொடர்பான இழிவான கருத்துக்களை தெரிவிப்பவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ்  ஆயுள் தண்டனை விதிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  சட்டப்பேரவையில் ஒப்புதல் பெறபட்ட பிறகு இது அமல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.