பிரதமர் மோடி - ஜப்பான் ராணுவ அமைச்சர் சந்திப்பு
ஜப்பான் ராணுவ அமைச்சர் இட்சுனோரி ஒனோடேரா, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்;
ஜப்பான் ராணுவ அமைச்சர் இட்சுனோரி ஒனோடேரா, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார். பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இரு நாட்டு ராணுவ உறவுகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினார்கள்.