கர்நாடகா கனமழை எதிரொலி - சாலைகளில் பெருக்கெடுத்த தண்ணீர்

கர்நாடக பகுதிகளில் வளிமண்டலத்தின் மேல்அடுக்கு சுழற்சி நிலவுவதாலும், மேற்கு திசைக்காற்றின் வலுஅதிகரிக்கும் இருப்பதாலும், கர்நாடகாவின் சிக்மகளூரு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

Update: 2018-08-14 06:34 GMT
கர்நாடக பகுதிகளில் வளிமண்டலத்தின் மேல்அடுக்கு சுழற்சி நிலவுவதாலும், மேற்கு திசைக்காற்றின் வலுஅதிகரிக்கும் இருப்பதாலும், கர்நாடகாவின் சிக்மகளூரு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பெரும்பாலான இடங்களில் சாலைகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் கனமழை - பல்வேறு இடங்களில் நிலச்சரிவு

இமாச்சல பிரதேச மாநிலம் ஷமாபா மாவட்டத்தில் நேற்றிரவு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பெரும்பாலான மலைப்பகுதிகளைக் கொண்ட இங்கு, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஷமாபா -பதன்கோட் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் பஞ்ச்புலா எனுமிடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். சிலர் ஆபத்தை உணராமல் சாலையை கடக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


Tags:    

மேலும் செய்திகள்