"வளர்ச்சி வேண்டும் என்றால் என்னை பற்றி விமர்சிக்காதீர்கள்" - புதுவை முதல்வருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதில்
பதிவு: ஆகஸ்ட் 06, 2018, 02:31 PM
புதுச்சேரி முதலமைச்சர் நராயணசாமிக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் அதிகார மோதல் நிலவி வரும் நிலையில், கிரண்பேடி தன்னிச்சையாக பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றத் தேவையில்லை என  நாராயணசாமி கூறியிருந்தார். இந்த நிலையில், நாராயணசாமிக்கு பதில் அளிக்கும் விதமாக, வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டுள்ள கிரண்பேடி, ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து,  எதிர்மறையான கருத்துக்களை கூறுவதால், புதுச்சேரியின் வளர்ச்சி பாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். பொறுப்புள்ள முதலமைச்சராக இருக்கும் நாராயணசாமிக்கு, புதுச்சேரியில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், அவர் ஆளுநரின் அதிகாரம் பற்றி விமர்சனம் செய்திருக்க கூடாது எனவும் கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.